Breaking News
Home / ஈழச் செய்திகள்

ஈழச் செய்திகள்

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா….

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி வருகின்றனர்.இந்த செயற்பாடானது இரட்டை நாக்கு அரசியலையே வெளிக் காட்டுகின்றது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் …

Read More »

தொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்

நாட்டில் தற்போது இருக்கும் ஜனாதிபதி அவர்களினால் தமிழர்தாயகப் பகுதியை மீண்டும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு உட்படுத்துவதற்கான ஒருபாரிய ஏற்படு முன்னகர்த்தப் பட்டுவருகின்றது. அந்த முன்னகர்ப்பின் முதற்கட்டமாக தமிழர்தாயக கிழக்குமாகாணப் பகுதியில் இருக்கின்ற தொள்பொருட்ச்சின்னங்கள்,வரலாற்று அடையாளங்கள் போன்றவற்றை பராமரிப்பது அதனைகண்காணிப்பது என்றபோர்வையில் அந்தசெயலணி மூலமாக தமிழர்தாயக வரலாற்றுத் தொண்மைகளை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றது.  இந்ததிட்டம் கிழக்குமாகாணத்தை தொடர்ந்து வடக்கு மாகாணத்திலும் அவ்வாறன செயலணி கொண்டுவர இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  2009 நடாத்திய மாபெரும் …

Read More »

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More »

மட்டக்களப்பில் திடீர் நேர்கை (விபத்து) ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உந்துருளி ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் இரகுநாதன் மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் …

Read More »

சிறீலங்கா விண்ணூந்து சேவைகள் யூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

சிறீலங்கா விண்ணூந்து சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் சிறப்பு வேலைத் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “விண்ணூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள …

Read More »

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்…!

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைகாக மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம். தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில், மக்களின் தேவைகருதிய 28 துறைசார் அங்கங்கள், தம்மை நிலைப்படுத்திப் பயணித்தன. அதில் ஒரு பகுதி தான் அரசியலே அன்றி அதுவே ஒரு இனத்தின் வாழ்வல்ல. ஒரு மக்கள் …

Read More »

கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர்.

அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு, சுகாதார செயன்முறைகளைப் பின்பற்றி பொது மக்கள் நடக்கும் போதே நாட்டில் இருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார். அத்துடன், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸை ஒழிப்பதில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலின் கீழ் ஸ்ரீலங்கா முன்னணி வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக சங்கத்தின் …

Read More »

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை.

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சிறீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மெல்போர்ன் நோக்கி பயணித்துள்ளது. இதற்கு முன்னதாக தென்னாசிய நாடுகள் மற்றும் லண்டன்,டுபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சிறீலங்கா மாணவர்கள் நாட்டிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »