Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள்

ஐரோப்பிய செய்திகள்

ஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……

உலக புகழ்ப்பெற்ற பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பிரான்ஸின் ஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது.COVID-19 நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கோபுரம் ஜூன் 25 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.ஆனால் கோபுரத்தில் உள்ள தளங்களுக்குச் செல்ல மின்தூக்கிகளைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதியில்லை, படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்தமுடியும்.ஈஃபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது.கிருமித்தொற்று தொடர்பாக அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்றும், கோடை காலத்திற்குள் முழுச் …

Read More »

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்!

COVID-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க டென்மார்க் தயாராகியுள்ளது.இதற்கமைய டென்மார்க், எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஷெங்கன் நாடுகள் புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.மேலும், சுவீடன் மற்றும் போர்த்துக்;கல் ஆகியவை அளவுகோல்களை பூர்த்தி …

Read More »

றுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலையாழி பிரெஞ்சுப் படையினரால் எப்படிக் கைது செய்யப்பட்டார்..!

பாரிஸில் சிறிய வீடொன்றில் மறைந்து வாழ்ந்த பெலிஸியன் கபுஹா( Felicien Kabuga) கைதுசெய்யப்பட்ட மாடிக் குடியிருப்புக்கு அயலில் வாழ்வோர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை. “அதிகாலையில் எங்கள் கட்டடத்துக்குள் திடுதிப்பென நுழைந்த பொலீஸ் படையினர் முதியவர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு இறங்குவதை ஜன்னல் வழியே கண்டேன். அவர் ஒரு நோயாளி போலத் தளர்ந்து காணப்பட்டார். ஆமையைப்போல மெல்ல ஊர்ந்து நடந்து சென்றார்.கையில் விலங்குகள் கூட இடப்படவில்லை..” ” அவரை முன்னரும் …

Read More »

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais கடற்பகுதி வழியாக சிறிய இயந்திர படகில் பிரித்தானியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். அதிகாலை 4:30 மணிக்கு இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், pas de calaisயின் Dannes கடற்பகுதியில் வைத்து இவர்கள் மீட்கப்பட்டனர். கண்காணிப்பில் ஈடுபட்ட கடற்படை ஜொந்தாமினர் இவர்களை மீட்டுள்ளனர்.படகில், இரு பெண்கள், இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை …

Read More »

கொவிட் -19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது !

கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 21,327 விமான பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 மில்லியனுக்கும் அதிகமானதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் …

Read More »

பிரான்சில் முகக்கவசம் அல்லது கையுறைகளை தரையில் வீசினால் 300€ !

முகக்கவசம் அல்லது பிளாஸ்டிக் கையுறைகளை தரையில் வீசியதற்காக 300 யூரோவரை அபராதம் விதிக்கும் மசோதாவை ஒரு பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றில் முன்மொழிந்தார். மே 11 ஆம் திகதி பொது முடக்கம் தளர்வு தொடங்கியதிலிருந்து, Lyon, Marseille மற்றும் Paris போன்ற பல நகரங்களில் குப்பை சேகரிப்பாளர்கள் தரையில் காணப்படும் முகக்கவசங்களின் எண்ணிக்கை குறித்து புகார் அளித்துள்ளனர். இவ்வாறான நடத்தை “முக்கியமான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்” …

Read More »

அடுத்த ஆண்டுக்கான இந்திய மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் சந்திக்கும் சவால்கள்!

(18 மே 2020) அடுத்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு இடமளிப்பதற்கான தளவாட மற்றும் திட்டமிடல் சவால்களை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரான்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயினால் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகளை செயற்படுத்தும் அதே வேளையில், பிரான்ஸ் இருதரப்பு உறவுகளின் கட்டமைப்பிற்குள் இந்தியாவுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு பல புதுமையான வழிகளை முன்மொழிந்துள்ளது. இந்த நெருக்கடி கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சாரத் துறைகளில் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக மாறும் என்று …

Read More »

பாரிஸ் நகரமுதல்வரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத மக்ரோன்!

நேற்று (19/05/2020) செவ்வாய்க்கிழமை அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கும் நகர முதல்வர்களுக்கும் இடையே காணொளி தொடர்பாடல் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இன்னும் Île-de-France பிராந்தியம் சிவப்பு மண்டலமாக இருக்கும் நிலையில் பாரிஸ் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களையும் திறக்கும் முனைப்புடன் இருக்கும் பாரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo, இது தொடர்பாக இம்மானுவல் மக்ரோனிடம் வினவினார். பூங்காக்களை திறப்பதற்கு அதிபர் அனுமதி அளிக்கவில்லை. மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பூங்காக்களை …

Read More »