Breaking News
Home / ஈழச் செய்திகள் / கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வைத்தியசாலைகள்!

சிறீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என ஐயப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நான்கு சிறப்பு வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.சிறீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த சிறப்பு வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குறித்த 4 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களும், நோய் அறிகுறிகளுடனும் இனம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்த வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதே வேளை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.இரத்தினபுரி, பெல்மடுல்லை பகுதியில் உள்ள 67 பேர் இன்று தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் எதிர்வரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படவுள்ளனர்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *