Breaking News
Home / உலகம் / இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது.

NEW DELHI, INDIA – MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility amid concerns of infection, on day 7 of the 21 day nationwide lockdown imposed by PM Narendra Modi to check the spread of coronavirus, at Nizamuddin West on March 31, 2020 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் 669 பேரும், தெலுங்கானாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில், தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 345ஆக உள்ளது. இங்கு அதிகபட்சமாக 83 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 இல் இருந்து 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழப்பு 149 இல் இருந்து 166 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 411 இல் இருந்து 473ஆக உயர்ந்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *