Breaking News
Home / உலகம் / சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்தில் இக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரே நேரத்தில் ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெறமுடியும் எனவும் கூறப்படுகின்றது. கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. துரித பரிசோதனைக் கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *