Breaking News
Home / உலகம் / 100 தலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

100 தலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 100 தலிபான் அமைப்பினரை அந்நாடு விடுதலை செய்துள்ளது.
அமைதிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 100 தலிபான் கைதிகளை அவர்களின் உடல்நிலை, வயது மற்றும் மீதமுள்ள தண்டனையின் அடிப்படையில் விடுவித்ததாக தேசிய பாதுகாப்புச் சபையின் செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து சிறைகளில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்கவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் நடுவே நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து தலிபான்கள் இடைநடுவில் வெளியேறினர். இந்நிலையில் பல்வேறு சிறைகளில் இருந்த 100 தலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *