Breaking News
Home / உலகம் / தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலையவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக இருந்தது. இந்நிலையில், அங்கு இன்று மட்டும் 96 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *