Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 765 பேர் மரணம்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 765 பேர் மரணம்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 765 தொற்றாளர்கள் மரணிதுள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை மொத்தம் 7,248 ஆக உயர்ந்துள்ளது.

அவற்றில் 140 இறப்புகள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றதாகவும், 568 பேரின் இறப்புகள் முந்தைய வாரத்தில் நிகழ்ந்ததாகவும், மீதமுள்ள 57 பேரின் இறப்புகள் மார்ச் மாதத்திலிருந்து நிகழ்ந்ததாகவும் NHS தெளிவுபடுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் இன்று வெளியிட்டப்பட்ட இறப்பு எண்ணிக்கைகள் கடந்த 24 மணித்தியாலத்திற்கு உட்டபட்டவை அல்ல என தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை ஸ்காட்லாந்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை 81 ஆகக் குறைந்துள்ளதாக முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். வேல்ஸ் மேலும் 41 இறப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. வட அயர்லாந்தில், மேலும் நான்கு பேர் இறந்துள்ளன நிலையில் அங்கு இறப்பு எண்ணிக்கை மொத்தம் 82 உயர்ந்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *