Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் 24 மணிநேரத்தில் 424 பேர் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்சில் 24 மணிநேரத்தில் 424 பேர் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இது வரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் உயிரிழந்திருப்பதோடு, கடந்த 24 மணிநேரத்தில் 424 பேர் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2000ம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, மொத்தமாக 23 000 பேர் மருத்துமனைகளில் இருந்து திரும்பியுள்ளனர்.

புதிதாக 3000பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 30 767 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

7 066 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 105 பேர் 30 வயதுக்கு கீழ்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 369 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

இதுவரை மருத்துமனைகளில் உயிரிழந்த 8044 பேர்களில் 90 வீதமானவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மூதாளர் இல்லங்களும் உள்ளடங்கலாக மொத்தமாக 12 210 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதேவேளை இன்று நாட்டுமக்களுக்கு அதிபர் ஏமானுவல் மக்ரோனின் ஆற்ற இருந்த உரை, வரும் திங்கட்கிழமை இடம்பெறுமென அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *