Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சின் கடலில் திமிங்கலங்கள் மகிழும் காட்சி.

பிரான்சின் கடலில் திமிங்கலங்கள் மகிழும் காட்சி.

உலகெங்கும் மக்கள் நடமாட்டம் முடங்கியதால் கிடைத்த அமைதியை உயிரினங்கள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டன.

பிரான்ஸின் மேற்கு கடலில் இரண்டு பெரிய திமிங்கலங்கள் கரையோரம்வரை வந்து நீந்தி மகிழும் மிக அரிதான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Marseille கரையில் உள்ள Calanques தேசிய கடற் பூங்காவினுள் அடங்கும் நீர்ப்பரப்பில் கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் தென்பட்ட இந்த அரிய உயிரினங்களின் காட்சியை கரையோரக் காவல் படையினர் படமாக்கி உள்ளனர். அவை பின்னர் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

உலகில் மிகப் பெரிய உயிரினங்களில் இரண்டாவதாக உள்ள திமிங்கிலங்கள் சாதாரண சந்தர்ப்பங்களில் இவ்வாறு கரையை அண்டி வருவது அருமை.

  • தற்போது கடலிலும் கரையிலும் சந்தடிகள் குறைந்து பூரண அமைதி நிலவுவதால் கடல்வாழ் உயிரினங்கள் தாங்கள் இழந்த உரிமையை மீள எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன.

நன்றி: ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *