Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் இறந்த தாயின் உடல் அருகே உயர் துறந்த மகள்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் இறந்த தாயின் உடல் அருகே உயர் துறந்த மகள்.

63 வயதான ஜூலி மர்பி என்ற பெண்மணி இங்கிலாந்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா தொற்றால் மரணத்தை தழுவினார்.

இவரின் இறுதிச்சடங்கு Birmingham இற்கு அருகிலுள்ள நகரொன்றின் சவச்சாலையில் நடந்துகொண்டிருந்தது.

தன் தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு ,
தாய்க்கு இறுதி வணக்கத்தை செலுத்திக்கொண்டிருந்த 32 வயதான லாரா ரிச்சட்ஸ் என்னும் பெண்மணி தன் தாயாரின் மரணம் தந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் தன் தாயின் அருகிலேயே மரணமானார்.

அவரைக்காப்பாற்ற மேற்கொண்ட துரித முயற்சிகள் எதுவுமே பலன்தரவில்லை.

இறுதியில்,அதே சவச்சாலையில் தன் பிரியத்திற்குரிய தாயின் அருகில் , அவரை நேசித்த அன்புமகள் புதைக்கப்பட்டார்.

அன்பின் வலிமை எல்லையற்றது.
அதுவே அவர்கள் இருவரையும் அருகருகே உறங்கவைத்திருக்கின்றது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *