Breaking News
Home / ஈழச் செய்திகள் / மன்னாரில் தாராபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை!

மன்னாரில் தாராபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை!

மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு குடும்பங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொரோனா சமூதாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் குறித்த கிராமத்தில் உள்ள இரு வீடுகளுக்கும் சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களுக்கும் கொரோனா சமூதாய பரிசோதனைகளை மேற்கொண்டார்.

மேலும், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களும் குறித்த வீடுகளுக்கு சென்றதோடு கிருமி நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.மேலும் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி சிறீலங்கா இராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த தாரா புரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *