Breaking News
Home / ஈழச் செய்திகள் / இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என சிறீலங்கா கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், கண்காணிப்பு மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் உள்ளிட்ட அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *