Breaking News
Home / ஈழச் செய்திகள் / ஊரடங்கு சட்டத்தை மீறிய 18 ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது.

ஊரடங்கு சட்டத்தை மீறிய 18 ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது.

சிறீலங்காவில் COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 18 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 4 ஆயிரத்து 863 உந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 196 உந்துகளும் சிறீலங்கா காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *