Breaking News
Home / ஈழச் செய்திகள் / அமெரிக்க வங்கியில் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை.

அமெரிக்க வங்கியில் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை.

அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணம் ஸ்ரீலங்காவில் பிரதான தனியார் வங்கி ஒன்றில் உள்ள 36 வங்கிக்கணக்குகளில் வைப்பிலிட்டப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இணையத் தளம் ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் சர்வதேச வணிக நிறுவனம் ஒன்றின் வங்கி கணக்கிலேயே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்தப் பாரிய மோசடி தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து ஐயத்தின் பேரில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.உள்நாட்டின் குறித்த தனியார் வங்கி, தனது வங்கியின் 36 கணக்குகளுக்கு திடீரென வந்த ஒரே அளவான பாரிய தொகையையடுத்து, அதில் ஐயம் கொண்டு புலனாய்வுத் துறைக்கு அறிவித்துள்ளது.இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளிலேயே இந்த 1,400 மில்லியன் ரூபா மோசடி வெளியாகியுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *