Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 987 பேர் இறப்பு

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 987 பேர் இறப்பு

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் நாள் அறிக்கை:

10/04/2020 இரவு 07:24 மணி: பிரான்சில் கிருமி தொற்று அதிகரித்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 13,197 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 90,676 ஆக உயர்ந்தது,

இன்று வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 987 பேர் இறந்ததாகவும் 4,342பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்,

அதேவேளை, Île-de-France மாகாணத்தில் 10 வயது குழந்தை ஒன்றும் கொரொனா கிருமி தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,

கடுமையான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் 7004 பேர் (-62 குணமடைந்தவர்கள் தொகை), கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 431 நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்

மருத்துவமனை தரவுகளின்படி 8,598 பேர் (24 மணிநேரத்தில் 578 பேர்) இறந்துள்ளனர். வயோதிப பராமரிப்பு மற்றும் சமுக நிலையங்களில் 4,599 பேர் (24 மணிநேரத்தில் 409 பேர்) இறந்துள்ளனர்,

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட (24 மணிநேரத்தில் 3,161 பேர்) சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 31,267 மற்றும் 24,932 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணிநேரத்தில் 1,967).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *