Breaking News
Home / உலகம் / உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மீது இனவெறி கருத்துத் தாக்குதல்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மீது இனவெறி கருத்துத் தாக்குதல்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் வேளையில் தனக்கு மரண அச்சுறுத்தல் வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ;
“இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கும் மேலாக தனிப்பட்ட ரீதியாக இனவெறி கருத்துத் தாக்குதல்களையும் மரண அச்சுறுத்தல்களைக் கடந்து நான் கடமையாற்றுகிறேன். கொரோனா வைரஸ் தொற்று நோயை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தபோது இதை சந்திக்க நேர்ந்தது. “என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு கவலையில்லை, உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று டெட்ரோஸ் கூறினார் . இந்த வைரசை கட்டுப்படுத்த பாரியளவில் போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *