Breaking News
Home / உலகம் / இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அரசு கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் வரும் 14ஆம் திகதியுடன் இந்த உத்தரவு முடிவடைகின்றது. இந்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவில் வரும் 30ஆம் திகதி வரை முழு அடைப்பு இருக்கும் என மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *