Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்கா ஆழ்கடலில் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது.

சிறீலங்கா ஆழ்கடலில் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது.

சிறீலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது 327 கோடி ரூபாயிற்கு பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஐயப்படும் நபர்கள் ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறீலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமையவே இன்று (சனிக்கிழமை) முற்பகல் 9.54 மணியளவில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 327 கோடி ரூபாய் என்றும் இவ்வருடத்தில் மூன்று படகுகள் சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் மாத்திரம் கடற்படையினரால் 687 கிலோ கிராம் ஹெரோயின் , 795 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 579 கிலோ கிலோகிராம் கெட்டமைன்ட் எனப்படும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *