Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் அடுத்த வாரம் முதல் வங்கி அட்டைகளின் (paiement sans contact ) செலுத்தும் தொகை 50€ வரை உயர்த்தப்படலாம் !

பிரான்சில் அடுத்த வாரம் முதல் வங்கி அட்டைகளின் (paiement sans contact ) செலுத்தும் தொகை 50€ வரை உயர்த்தப்படலாம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை துறைசார்ந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடவுச்சொல் (code) இடாது, தன்னியக்கமாக( paiement sans contact) வங்கி அட்டைகளை பாவிப்பவத்குரிய பணம் செலுத்தும் அளவு உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


80% வீதமான வைரஸ் தொற்று கைகள் ஊடாகவே பரவுகின்றது என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், வங்கி அட்டைகளுக்கான கடவுச்சொற்களை பாவிக்கும் போது, குறித்த கருவியூடாக வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 20,30 யூரோக்கள் அளவுக்கே வங்கி அட்டைகளினால் முறையில் செலுத்த முடியும் என்ற நிலையினைத் தளர்த்தி 50 யூரோ வரை அதனை உயர்த்துவது என்ற முடிவுக்கு வங்கிகள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் வாரத்தில் இது பற்றிய முடிவு எட்ட இருப்பதோடு, இதற்கான தொழில்நுட்ப நுணுக்கங்களை ஆய்வு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *