Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் மூன்றாவது போக்குவரத்து துறை (RATP ) ஊழியர் மரணம்.

பிரான்சில் மூன்றாவது போக்குவரத்து துறை (RATP ) ஊழியர் மரணம்.


RATP இன் கணக்கியல் துறையில் பணி புரியும் ஊழியர் ஒருவரே கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவர் உயிரிழந்ததாக RATP நிர்வாக அதிகாரி Catherine Guillouard தெரிவித்துள்ளார்.

“இது மிக இறுக்கமான நேரம். ஊழியரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களையும், ஆதரவினையும் வழங்குகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார். உயிரிழந்த ஊழியர் கணக்கியல் துறையில் பணிபுரிவதாகவும், பயணிகளுடன் நேரில் தொடர்பில் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழக்கும் மூன்றாவது RATP ஊழியர் இவராவார். RATP ஊழியர்களில் மொத்தம் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *