Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சின் கொரோனா தொற்று தகவல்.11.04.2020

பிரான்சின் கொரோனா தொற்று தகவல்.11.04.2020

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை:

11/04/2020 இரவு 07:29 மணி: பிரான்சில் கிருமி தொற்று அதிகரித்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 13,832 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 93,790 ஆக உயர்ந்தது,

இன்று சனிக்கிழமை மாலை, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 643 பேர் இறந்ததாகவும் 3,114பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்,

மருத்துவமனை தரவுகளின்படி 8,943 பேர் (24 மணிநேரத்தில் 353 பேர்) இறந்துள்ளனர். வயோதிப பராமரிப்பு மற்றும் சமுக நிலையங்களில் 4,889 பேர் (24 மணிநேரத்தில் 290 பேர்) இறந்துள்ளனர்,

கடுமையான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் 6,883 பேர் (-121 குணமடைந்தவர்கள் தொகை), கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 255 புதிய நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்,

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட (24 மணிநேரத்தில் 2,044 பேர்) சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 31,320 மற்றும் 26,391 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணிநேரத்தில் 1,527).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *