Breaking News
Home / ஈழச் செய்திகள் / சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்தவர்கள் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்தவர்கள் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர். அரச அதிபரின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனடிப்படையில் சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்குண்டிருந்த 33 பேரில் 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே மூவர் மாலைதீவு மற்றும் டுபாயிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர். ஏனைய 16 இலங்கையர்களையும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபரின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *