Breaking News
Home / சினிமா / ஒரே படத்தில் இணையும் “ரஜினி-கமல்” இயக்குனர் லோகேஷ்.

ஒரே படத்தில் இணையும் “ரஜினி-கமல்” இயக்குனர் லோகேஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் குஷ்பு, மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து கமலஹாசனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் இந்தப்படத்தில் மதிப்புக்குரிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம்,கைதி ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் அந்த படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் குறிப்பிட காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Check Also

Sample post -5 வைரஸ் பரவி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

வைரஸ் பரவி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வைரஸ் பரவி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்வைரஸ் பரவி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்வைரஸ் பரவி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *