Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / உயிர்த்த ஞாயிறு வழிபாடு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு.

உயிர்த்த ஞாயிறு வழிபாடு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு.

ஈஸ்டர் ஆராதனைகள் ஒன் லைனில்!

வத்திக்கான் முதல் வற்றாப்பளை வரை ஆலயங்கள் மூடிக்கிடக்கின்றன. திருப்பதி வெங்கடேஸ்வரர் தரிசனத்தையும் , லூட்ஸ் அன்னையின் திருப்பலியையும் வீட்டுக்குள் இருந்துகொண்டே சிமாட் போன்களில் கண்டு வழிபட அடியார்களை சமகாலம் நிர்ப்பந்தித்திருக்கிறது. பள்ளிப் படிப்பும் பள்ளிவாசல் தொழுகையும் கூட நடுவீட்டுக்குள்தான் நடக்கின்றன.

உலகக் கத்தோலிக்க மக்கள் தமது வீடுகளில் இருந்துகொண்டு தேவாலயங்களில் மூடிய அறைகளில் நிகழும் ஆராதனைகளை ஒன் லைனில் தரிசித்தவாறு ஈஸ்டர் திருநாளைக் கடந்துகொண்டிருக்கின்றனர்.

பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் தமிழர் தாயகத்திலும் அடியார் கூட்டங்கள் இன்றி கத்தோலிக்க மதத் தலைவர்கள் தனித்து நடத்திய ஈஸ்டர் ஆராதனைகள் சமூகவலைத் தளங்களில் ஒளிபரப்பாகியுள்ளன.

வெறிச்சோடிய நிலையில் காணப்படும் தேவாலயங்களில் இருந்தவாறு பங்குத் தந்தையர்கள் தமது ஈஸ்டர் உரைகளை தாங்களாகவே பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். தத்தமது பங்குகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய வட்ஸ்அப்,முகநூல், zoom வீடியோ குழுக்கள் ஊடாகப் பலரும் இந்த ஆராதனைகளில் இணைந்து கொண்டுள்ளனர்

இதுபற்றிய செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

வத்திக்கான் மூடி முடக்கப்பட்டிருப்பதால் வழமையாக சென். பீற்றர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் நடைபெறும் பாரம்பரியம்மிக்க பாப்பரசரின் ஈஸ்டர் உரை இன்றைய தினம் இடம்பெறவில்லை.

வழமைக்கு மாறாக தேவாலயத்தில் மிகச் சிறு குழுவினருடன் புனித பாப்பரசர் தனது ஆராதனை உரையை உள்ளிருந்தவாறு நிகழ்த்திருக்கிறார்.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *