Breaking News
Home / உலகம் / தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கொரொனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்தமைக்காக, தேசிய சுகாதார சேவைகளுக்குத் தனது உயிரால் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இலண்டனிலுள்ள சென்.தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர், தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தவாறே உடல் நிலை தேறிவரும் ஜோன்சன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிறன்று பிரித்தானியாவில் கொரொனாவினால் ஏற்பட்டுவரும் உயிரிழப்பு 10,000 இனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 917 உயிரிழப்புகளுடன் மருத்துவமனைகளில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 9,875 ஆகப் பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் வெப்ப காலநிலைச் சூழல் நிலவினாலும் கூட உயிர்த்த ஞாயிறு காலத்தில் மக்களை வீட்டில் தங்கியிருப்பதன் மூலம் வைரஸ் பரவுகையைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர்கள் வலியுறுத்திக் கேட்கின்றனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *