Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் மொத்தமாக 561 பலி.

கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் மொத்தமாக 561 பலி.

ஞாயிறு சுகாதார அறிக்கை :

கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் என மொத்தமாக 561 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1 688 பேர் கடந்த மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிகிச்சைப் பிரிவில் இருந்து 255 பேர் வெளியேறியும், 220 பேர் அனுமதிக்கபபட்டும் உள்ளனர். 795 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது தற்போது 31 826 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், இதில் 6 845 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்காவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையானது சுகாதாரத்துறையினை சற்று ஆறுதலடைய வைத்துள்ளது. இது வரை மொத்தமாக 14 393 பேர் உயிரிழந்துள்ளனர். 27 186 பேர் குணமடைந்துள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *