Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் மொன்ஜெரோன் (Montgeron) நகர பிதாவின் அதிரடி உத்தரவு!

பிரான்சில் மொன்ஜெரோன் (Montgeron) நகர பிதாவின் அதிரடி உத்தரவு!

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் காட்டிக்கொடுக்குமாறு Île-de-Franceஇல் ஒரு நகரபிதா கோரியுள்ளார். உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை யார் மீறினாலும், தேசியக் காவல்துறையினருக்கு அல்லது மாநகரக் காவல் துறையினருக்கு உடனடியாக அறிவிக்கும் படி மொன்ஜெரோன் நகரபிதா கோரியுள்ளார்.

Île-de-France சின் எசொன் (Essonne) பகுதியான 91 வது மாவட்டத்தின் மொன்ஜெரோன் (Montgeron) நகரத்தின் நகரபிதா, Sylvie Carillon இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கான அறிவித்தல்களை, அங்கிருக்கும் முக்கிய குடியிருப்பு அடுக்கு மாடிக் கட்டடங்களின் நுழைவாயில் பகுதிகளிலும், நகரத்தின் முக்கிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் மக்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ‘நாங்கள் இது வரை அமைதியாகவே இருந்தோம். ஆனால் பலர் சட்டத்தை மீறி ஆபத்தின் சிவப்பு எல்லையைத் தாண்டிவிட்டனர். நான் நகரபிதாவின் முடிவுடன் முற்றிலும் உடன்படுகின்றேன்’ எனக் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘சட்டத்தை மீறுபவர்கள், தங்களின் உயிரையும், மற்றவர்களின் உயிரையும், ஆபத்திற்கு உள்ளாக்குகின்றார்கள். ஒவ்வொரு குடிமகனிற்கும் சட்டத்தை மீறுபவர்கள் தொடர்பாகக் காவல்துறையினருக்கு அறிவிக்கும் உரிமை உள்ளது. அது அவர்களின் கடமையும் கூட.’ எனவும் நகரபிதா தெரிவித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *