Breaking News
Home / ஈழச் செய்திகள் / ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்பு,ரஞ்சன் ராமநாயக்க கைது.

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்பு,ரஞ்சன் ராமநாயக்க கைது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக சிறப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார். இது வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 426 வாகனங்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *