Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் 574 பேர் ஒரே நாளில் மரணம், 6,821 பேருக்கு தீவிர சிகிச்சை.

பிரான்சில் 574 பேர் ஒரே நாளில் மரணம், 6,821 பேருக்கு தீவிர சிகிச்சை.

13/04/2020 இரவு 07:49 மணி, சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் நாள் அறிக்கை:

பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததன் படி, மொத்தம் 14,967 இறப்புகள் (மருத்துவமனைகளில் 9,588 இறப்புகள் மற்றும் வயோதிப பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 5,379). ஏப்ரல் 13 திங்கள் அன்று, மருத்துவமனையில் 335 இறப்புகளும் மருத்துவ சமூக மையங்களில் 239 இறப்புகளும் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளன.

6,821 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியாக 5 வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சையில் இன்று கடுமையான தொற்றுக்களின் எண்ணிக்கை 227 பேர் உள்ளனர்.தற்போது 32,113 பேர் மருத்துவமனையில் (24 மணிநேரத்தில் 1,257) அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 98,076 பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 27,718 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்
Île-de-France பகுதி தற்போது தொற்றுநோயால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13 திங்கள் அன்று இப்பகுதியில் மொத்தம் 3,725 பேர் இறந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் 211 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, ​​2,614 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *