Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழரும் – பிரான்ஸ்

பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழரும் – பிரான்ஸ்

பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலாரது வாழ்வாதாரத் தொழில் மையங்கள் உணவகங்களே.(Restaurants)

பாரிஸில் வீதியோர உணவகங்கள், கபேக்கள், பார்கள் ஆசிய நாட்டவர்களை குறிப்பாக தமிழர்களையே தமது ஊழியர் படையாகக் கொண்டு இயங்குகின்றன.

சுமார் ஒருமாதகாலமாக இவை அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் உருவாகி இருக்கும் பெரும் ‘பொருளாதார அனர்த்தம்’ தமிழ் தொழிலாளர்களது குடும்பங்களையே முதலில் தாக்கியிருக்கின்றது.

விரும்பியோ விரும்பாமலோ ‘கையில் காசு’ என்றவாறான சட்டப் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்குள் நீண்டகாலம் பணிபுரிந்து பழக்கப்பட்டுப்போன பலரையும் தற்போதைய சூழ்நிலை பலமாகப் பாதித்திருக்கிறது. அரச சலுகைகளை பெறமுடியாது அவலப்படும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் மே 11 ஆம் திகதிக்குப் பின்னரும் உணவகங்கள், கபேக்கள், ஹொட்டேல்கள் தொடர்ந்து மூடியே இருக்கும் என்று அரசுத்தலைவர் விடுத்திருக்கும் அறிவிப்பால் இத்துறைகள் சார்ந்தோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை ஒரு பெரும் ‘பொருளாதாரப் பேரனர்த்தம்’ என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக் கின்றன.

14-04-2020

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *