Breaking News
Home / உலகம் / உலகெங்கும் மனிதர்களின் முடக்கம் இயற்கையின் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

உலகெங்கும் மனிதர்களின் முடக்கம் இயற்கையின் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

கங்கை நதி நீர் அருந்துவதற்கு ஏற்ற தரத்தை எட்டியிருப்பதாக நீரியல் ஆய்வாளர்களை ஆதாரம் காட்டி இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

உலகெங்கும் மனிதர்களின் முடக்கம் இயற்கையில் ஏற்படுத்திவரும் மாற்றங்களில் ஒன்றாக இதுவும் பதிவாகின்றது.

இந்தியா முழுவதும் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் தொழிற்றுறைகள் முடங்கியிருப்பதும் கங்கை நீர் மாசடைவதை வெகுவாகக் குறைத்திருக்கிறது. அத்துடன் ஆறுபாயும் பிரதேசங்களில் கடந்தசில வாரங்களில் பலத்த மழையும் பெய்திருக்கிறது.

இதனால் மாசுகள் குறைந்து ஆற்று நீர் குடிக்கக் கூடிய தரத்துக்கு வந்திருப்பதாக நீரியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ள பலரும், கங்கை நீர் தெளிந்திருப்பதை தங்கள் வாழ்நாளில் இப்போது தான் காண்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷ் நாடுகளிடையே மிக நீண்ட தூரம் (2,601 km) பாயும் கங்கை நதி இந்துக்களின் புனித தீர்த்தங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

14-04-2020

நன்றி ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *