Breaking News
Home / உலகம் / உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் சூளுரை.

உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் சூளுரை.

கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் “அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றதால்” உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் வைரஸ் தோன்றிய பின்னர் ஐ.நா. நிறுவனம் தவறாக நிர்வகித்து அதை மூடிமறைத்ததாக அவர் குற்றம் சாட்டினார், மேலும் ஐ. நா பொறுப்புக் கூறக் கடமைபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார அமைப்பை (WHO) விமர்சித்தும், அது பொதுவாக சீனாவுக்கு பக்கச் சார்பானது என்றும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அதிபர் மிகவும் மெதுவாக செயல்பட்டார் என்ற தொடர்ச்சியான விமர்சனத்தைத் திசை திருப்ப முயன்றுள்ளார். ஐ.நா தலைவர்; உலக சுகாதார அமைப்பிற்கு நிதி குறைக்க இது “நேரம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தை மாத இறுதியில் அவர் எடுத்த முடிவை சுட்டிக் காட்டியுள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *