Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி !

யாழில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15.04.2020) கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்கியுள்ளனர்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தந்தை மற்றும் 11 வயது, 7 வயது மகள்களாவர்.பன்னிருவரில் ஐவர் ஆண்களாவர். 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.

அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *