Breaking News
Home / உலகம் / கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 123 பேர் மரணம்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 123 பேர் மரணம்.

கொரோனா வைரசின் அதிதீவிர தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 903 ஆகப் பதிவாகியுள்ளன. 8 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 17 ஆயிரத்து 368 பேர் ஓரளவு வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கனடாவில் இது வரை, 4 இலட்சத்து 54 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவின் மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *