Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / உள்ளிருப்பில் இருந்து உடனடியாக வெளியேவர முடியாது – Valérie Pécresse ..!

உள்ளிருப்பில் இருந்து உடனடியாக வெளியேவர முடியாது – Valérie Pécresse ..!

உள்ளிருப்பிலிருந்து வெளியேறுதல் என்பது, படிப்படியாக மாகாண வாரியாக செயற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு மாகாணங்களும் அரசும் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும். இது தான் அரசாங்கத்திற்கும் நல்லது என, Île-de-France இன் தலைவியான வலரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார்.
இது போன்ற மிகவும் சிக்கலான, ஆபத்தான சமயங்களில், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பிரச்சினைகள், அரசை விட அந்தந்த மாகாணங்களிற்கே அதிகம் தெரியும். மே 11க்கு பிறகு உடனடியாக Île-de-France உள்ளிருப்பில் இருந்து வெளியே வர முடியாது.

கொரொனத் தாக்குதலினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணமாக Île-de-France உள்ளது.
இங்கு வாழ்க்கை மீளத் தொடங்கும் நிலையில், 5 மில்லியன் மக்கள் அன்றாடம் Île-de-France பொதுப்போக்குவரத்துக்களை உபயோகிப்பார்கள். இதுவே சாதாரண கால நிலைமை. முன்பு போல் செறிவான மக்கள் தொகையை பொதுப் போக்குவரத்துக்களில் ஏற்ற முடியாது. வெறும் முகக் கவசத்தினை மட்டும் கொடுத்து மக்களை ஆபத்தில் தள்ள முடியாது. பாரிய தயார்ப்படுத்தல்கள் மிக மிக அவசியம்.
இதற்கு அரசாங்கம் மாகாணத்தோடு கைகோர்த்து இயங்கவேண்டும். இதனால் Île-de-France உடனடியாக வெளியே வந்து விட முடியாது என்றும், வலெரி பெக்ரஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *