Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்து.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்து.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ ஹெலிக்கொப்ரர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டுபேர் உயிரிழந்தும் ஐந்துபேர் காயமடைந்தும் உள்ளனர்.

தென் மேற்கு எல்லைப் பிராந்தியமான Hautes-Pyrénées இல் இன்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Pau என்னும் இடத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் ஐந்தாவது பீரங்கிக் ஹெலிக்கொப்ரர் படைப்பிரிவுக்குச் சொந்தமான ஹெலியே ஏழு படையினருடன் விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஹெலி அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயமே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

15-04-2020

நன்றி : ஊடகவியலாளர் ; குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *