Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் Notre Dame தேவாலத்தில் உள்ள ‘இம்மானுவல்’ எனும் இராட்சத மணி ஒலித்தது!

பிரான்சில் Notre Dame தேவாலத்தில் உள்ள ‘இம்மானுவல்’ எனும் இராட்சத மணி ஒலித்தது!

Notre Dame தேவாலயம் தீ விபத்துக்குள் சிக்கி 15/04/2020 ஒரு வருடம் நிறைவடைகின்றது. திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருத்தப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே நேற்று இரவு 8 மணி அளவில் இந்த இம்மானுவல் மணி ஒலிக்க ஏற்பாடுசெய்யப்பட்டது

Notre Dame தேவலத்தின் தெற்கு கோபுரத்தில் இந்த மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய மணி இதுவாகும். 13 தொன் எடை கொண்ட இந்த மணி, விசேட நாட்களில் மாத்திரமே ஒலிக்க வைக்கப்படும். கட்டிடம் மிகுந்த அதிர்வுக்குள்ளாகும் என்பதால் இந்த மணி ஒலிக்கவிடுவதை கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *