Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்ஸ் – மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்பு.

பிரான்ஸ் – மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்பு.

பிரான்சில், கொரொனா தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த மதிப்பீட்டின்படி, 108,847 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன,

மொத்தம் மரணங்கள் 17,920 (மருத்துவமனைகளில் 11,060 மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 6,860).

இன்று ஏப்ரல் 16 வியாழக்கிழமை, மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்புக்களும், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 336 உயிரிழப்புக்களும் நிகழ்ந்தன. மொத்தம் 753

6,248 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியாக 8 வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சையில் இன்றைய எண்ணிக்கை 270 பேர் (-209) ஆபத்திலிருந்து மீள்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

தற்போது 31,305 பேர் மருத்துவமனையில் (24 மணிநேரத்தில் 1,823) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32,812 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணிநேரத்தில் 1,925).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *