Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் கொரோனா தொற்றிலிந்ருந்து 34,420 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

பிரான்சில் கொரோனா தொற்றிலிந்ருந்து 34,420 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன், பிரான்சில் கோவிட் -19 தொற்று நோயின் நாள்மதிப்பீட்டை விவரித்தார்.

பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த சமீபத்திய மதிப்பீட்டின் படி, 109,252 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 58,989 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, கடந்த 24 மணிநேரத்தில் 3,214 பேருக்கு கிருமித் தொற்று ஏற்றப்பட்டுள்ளது.

மொத்தம் 18,681 உயிரிழப்புகள் உள்ளன (மருத்துவமனைகளில் 11,478 இறப்புகள் மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 7,203).

இன்று ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை, மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 418 உயிரிழப்புக்களும், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 343 உயிரிழப்புக்களும் நிகழ்ந்தன.

தற்போது 31,190 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் 2,167 புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் இருப்பு மீண்டும் சரிந்தது (24 மணி நேரத்தில் -115 நோயாளிகள்).

மேலும் 34,420 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணிநேரத்தில் 1,720).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *