Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / சுவிஸ் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலின் முக்கிய விபரங்கள்.

சுவிஸ் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலின் முக்கிய விபரங்கள்.

இன்றைய நாள் (17.04.2020) இடம் பெற்ற சுவிஸ் நாட்டின் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலில் உடல்நலம், பொருளாதாரம், நீதித்துறை மற்றும் இராணுவத்தின் பிரதிநிதிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சுவிஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்திருந்தனர் அதன் முக்கிய விபரங்கள் சில உங்களுக்காக.

1. சில அருங்காட்சியங்களும் வாசிகசாலைகளும் இணையதளத்தினூடாக சேவைகளை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

2. 5800 சிவில் பாதுகாப்பு குழுவினர் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அதில் 3400 திச்சினோ மற்றும் பிரன்ச் பேசும் மாநிலங்களிலும் 2400 ஏனைய ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

3. எதிவரும் ஆண்டில் தொழில் கல்வி சார்ந்த வேலை இடங்களை தேர்வு செய்யாத மாணவர்களுக்கு அவர்கள் அதனை தேர்ந்தெடுப்பதற்கான காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது.

4. மூன்று கட்டமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் சுவிஸ் நாட்டின் இயல்புநிலை தற்போதைய காலப்பகுதி வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

5. உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடைமுறைகளுடன் தற்போது சுவிஸ் நாடும் இந்த வாரத்தில் இருந்து இணைந்து செயற்படவுள்ளது.

6. 27.04.2020 திகதியில் இருந்து கீழ்குறிப்பிடும் சேவைகளான
பிசியோதெரபி, சிகைஅலங்காரம், உடல் மசாஜ், முகலங்காரம், பூக்கடைகள், பூந்தோட்ட ஆரம்பிக்க இருந்தாலும் சில பாதுகாப்பான நடைமுறைகளை, விதிமுறைகளை மேற்கொண்டால் மாத்திரமே அவர்களால் மேற்குறிப்பிட்ட சேவைகளை மேற்கொள்ள முடியும்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *