Breaking News
Home / ஈழச் செய்திகள் / மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து – வைத்திய கலாநிதி சிவமோகன்.

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து – வைத்திய கலாநிதி சிவமோகன்.

வைத்திய கலாநிதி சிவமோகன்

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்; “கொரோனா சூழலால் பொதுமக்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளார்கள்.தங்களது தொழில்களை இழந்து பெரிய தொழிலாளர்கள் முதல் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் வரை தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என்ற ஏக்கத்தில் இருந்து கொண்டு தங்களது குடும்பத்தினரை எப்படிக் காப்பாற்ற முடியும் எனத் தவித்து வருகிறார்கள்.

சில குடும்பங்கள் ஒருவேளை உணவு உண்ணுவதற்குக் கூட வழியின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ மனமுள்ள தனவந்தர்கள் கூட வங்கிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருப்பதால் ஏதும் செய்ய முடியாதுள்ளார்கள். இப்படியான நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து பேசப்பட்டுவருகிறது. அப்படியாக இருந்தால் நாடு முழுவதும் கொரோனா ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அல்லது சுகாதாரத் துறையினரால் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னரே தேர்தலை அறிவிப்பு வர வேண்டும். குறைந்தது மூன்று மாதங்களாவது மக்கள் தங்களை மீள்கட்டுமானம் செய்துகொள்ள மக்களுக்கு வழி விடவேண்டும். அதன் பின்னர்தான் தேர்தல் ஆணையகம் தேர்தல் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும்.

இன்று இந்த ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. எனவே இந்த அரசு ஏற்கனவே விட்ட தவறு போல் மீண்டும் ஒரு முறை தவறிழைத்து மக்களை இக்கட்டில் தள்ளக் கூடாது. எனவே தேர்தல் என்ற முயற்சியை உடனடியாகக் கைவிட்டு மக்களை இந்தக் கொடூரமான நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *