Breaking News
Home / உலகம் / ஆபிரிக்க நாடான மலாவியில் 21 நாள் முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை.

ஆபிரிக்க நாடான மலாவியில் 21 நாள் முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை.

கொரோனா தொற்று ஆபிரிக்க நாடுகளில் பரவிவருகின்ற சூழ்நிலையில், ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் அரசு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்க நிலையை பிரகடனப்படுத்தியது. இதனை எதிர்த்து மனித உரிமைகள் குழு அளித்த மனுவைத் தொடர்ந்து கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த 21 நாள் முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு மலாவி உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

மலாவி மனித உரிமைகள் பாதுகாவலர்கள் கூட்டணி ( Human Rights Defenders Coalition ) உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை ஆராய்ந்த நீதிபதி கென்யாட்டா நைரேண்டா வெள்ளிக்கிழமை (17.04.2020) முழு முடக்கத்தை நிராகரித்தார்., மாலாவியின் சமூக ஏழ்மை மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதனால் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க கூடுதல் ஆலோசனைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *