Breaking News
Home / உலகம் / முன்னணி ஆராய்ச்சியாளர் “Shi Zhengli” கோவிட் -19 சீனாவில் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.

முன்னணி ஆராய்ச்சியாளர் “Shi Zhengli” கோவிட் -19 சீனாவில் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.

வுகான் நச்சுயிரி ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர், Shi Zhengli கோவிட் -19 வுகான் நகரத்தினை தாக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சீனாவில் வவ்வால்களுடன் தொடர்புபட்ட SARS போன்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கள் சீனாவில் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.

நச்சுயிரிகள் பற்றிய இந்த ஆராய்ச்சிமையம் சீனா மற்றும் பிரான்சினால் நிதி முதலிடப்பட்டு 2017 இல் உருவாக்கப்பட்டது. பிரான்சின் முன்னாள் சுகாதார அமைச்சரின் அநியேஸ் புஸ்சின் கணவரும் இதன் பங்காளியாவார், இதன் திறப்புவிழாவில் அவர் கலந்துகொண்டு திறந்துவைத்திருந்தார். அதை இங்கு படத்தில் காணலாம். கொரோனோ நச்சுயிரியின் மரபணு வரைபடத்தினை இந்த ஆராய்ச்சிமையத்தின் மருத்துவ நிபுணர்கள்தான் உலகுக்கு அறிவித்ததுடன், இது ஒரு ஆபத்தான நச்சுயிரி, இதை எதிர்த்து போராடுவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கவேண்டும் எனக்கோரி உலக சுகாதரா நிறுவனத்திற்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜனவரியின் தொடக்கத்திலே தெரியப்படுத்தியிருந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிமையத்தின் சக பங்காளி என்ற முறையில் இது பிரான்சுக்கும் அதன் உயர் அரச அதிகாரிகளுக்கும், மருத்துவ விஞ்ஞானிகளுக்கும் தெரிந்திருக்கலாம். சுகாதார அமைச்சர் இதுபற்றி மக்ரோன் உள்ளடங்கலாக அனைவருக்கும் ஜனவரியிலே தெரியபடுத்தியுள்ளார்.ஆனால் அவர் உள்ளடங்கலாக யாருமே இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, பொருளாதாரத்தினை பாதிக்கும் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆக,பிரான்சுக்கு இதன் பாதிப்புகள் என்ன மாதிரியாக இருக்கும் என்பது முன்னரே தெரியும் என்பது தான் உண்மை. உலகுக்கும் தெரியும் ஆனால் உலகெங்கும் அரசுகள் முதலாளித்துவ இலாபம் கருதி அதை மறைத்து வந்தார்கள். மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்பதை ஒரு வருடத்திற்கு முன்னரே, இல்லை அதுமட்டும் மில்லை, இப்படியான வைரஸ் இனிவரும் காலத்தில் உருவாகலாம் ஆகையால் தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து அரசாங்கங்களையும் உலக சுகாதார அமைப்பு 9 வருடங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. அது பற்றிய கட்டுரையை உலக சோசலிச வலைத்தளத்தில் காணலாம். https://www.wsws.org/ta/articles/2020/04/16/john-a16.html.

ஆக நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது, இந்த வைரஸ் என்பது சீனாவினால் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட என்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள், எடுபட்டு போகாதீர்கள். எதையும் விஞ்ஞான அறிவு கொண்டு ஆராயுங்கள். நீங்கள் கேள்விப்படும், படிக்கும் அனைத்து தகவல்களையும் உண்மையா என பரிசோதியுங்கள். இது அறிவினை வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையான விடயம். இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை அமெரிக்க மருத்துவ விஞ்ஞான ஏடான “இயற்கை மருத்துவம்” விஞ்ஞான ஆய்வின் ஊடாக நிரூபித்துள்ளது. அந்த இணையவழி சஞ்சிகை முக்கியமான விஞ்ஞான ஆராய்ச்சிகளை பிரசுரிக்கும் உலகப்புகழ்பெற்ற சஞ்சிகையாகும். அதையும் நீங்கள் சரியான தகவலா என்பதை பரிசோதித்து பார்க்கலாம். இந்த ஆய்வினை எவனாவது விஞ்ஞான அடித்தளத்தில் சவால் செய்து நிராகரித்தால் மட்டுமே அதை மனித தயாரிப்பு என்பதை நம்பமுடியும். அப்படி நிரூபிக்க முயன்றால் விஞ்ஞானம் அவர்கள் முகத்தில் சிரிக்கும் என்பது இன்றைய இது வரையான உண்மை. இந்த ஆய்வினை செய்த அமெரிக்க நிபுணர்கள் தனித்து செய்யவில்லை,உலகெங்கும் உள்ள பிரபல நச்சுயிரி நிபுணர்களுடன் இணைந்தே இதை செய்துள்ளனர். https://www.nature.com/articles/s41591-020-0820-9,நான் இதை அடிக்கோடிடுகிறேன்.

இன்று சீனாவுக்கு எதிரான ஒரு யுத்தத்தினை செய்யவும், அதை தாக்கி அழித்து அடிமைப்படுத்தவும் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய அதன் எடுபிடிகளும், ஜரோப்பாவும் கூட முயன்றுகொண்டிருக்கின்றன. அதனால் தான்,இப்போது சீனா வைரஸ் பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுத்து, சீனாவுக்கு எதிரான இனவாதத்தினை கக்கிவருகின்றனர்.

பிரான்சின் உலக புகழ்பெற்ற ஆய்வுக்கூடமான பாஸ்த்தரும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல என்பதை கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளது. இப்படியான கருது கோள்களை மருத்துவ அறிஞர்கள் நிராகரிக்கிறார்கள், அதனுடன் கோபமுறுகிறார்கள். ஏன்? இதனது மூலம் பற்றிய தெளிவான மரபணு விளக்கம் கொடுக்கப்பட்டும் இதை மனித தயாரிப்பு என கூறுவதை அவர்களால் சகிக்க முடியவில்லை என்பது இங்கே நிரூபணமாகிறது. தமது விஞ்ஞான மரபுகளை ஏளனம் செய்பவர்களை விஞ்ஞானிகள் வெறுக்கிறார்கள். யார் இதை தீர்மானிப்பது, விஞ்ஞானிகளா அரசியல்வாதிகளா ? என கடுமையாக சாடுகிறார்கள். ஆக,சீன வைரஸ் என கூறுவதற்குப்பின்னால் மாபெரும் அழிவுகர அரசியல் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதை நாம் உணர்ந்து அதற்கு எதிராக அறிவியல் ரீதியா தயாராகவேண்டும், இல்லையேல் நாமும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு எடுபட்டு போகும் ஆபத்து இருக்கிறது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *