Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த யாழ் மாவட்டம் உள்ளடங்ககளாக ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் , பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய காவல் துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய காவல் துறை பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய காவல் துறை பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *