Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் COVID 19 – 24 மணி நேரத்தில் மொத்தமாக 642 உயிரிழப்பு.

பிரான்சில் COVID 19 – 24 மணி நேரத்தில் மொத்தமாக 642 உயிரிழப்பு.

பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த மதிப்பீட்டின் படி இன்று ஏப்ரல்18, சனிக்கிழமை, 24 மணி நேரத்தில் மொத்தமாக 642 உயிரிழப்பு இடம் பெற்றுள்ளன. வயோதிப பராமரிப்பு மையங்களில் (Ehpad ) 278 உயிரிழப்புக்களும், மருத்துவமனைகளில் 364 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
மொத்தமாக 19 323 உயிரிழப்புகள் உள்ளன (மருத்துவமனைகளில் 11,842 இறப்புகள் மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் Ehpad – 7,481 இறப்புக்கள்) இடம் பெற்றுள்ளன.

5,833 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியாக 10 வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சையில் இன்றைய எண்ணிக்கை 206 பேர், தற்போது 30,639 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 35,983 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர். (24 மணிநேரத்தில் 1,605 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *