Breaking News
Home / உலகம் / கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பு.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பு.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து எல்லையின் இரு புறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முடிவு என ட்ரூடோ நேற்று 18.04.2020 (சனிக்கிழமை) தெரிவித்தார்.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லை கடந்த மார்ச் 21 ஆம் திகதி மூடப்பட்டது. இதன் போது, கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அத்தியாவசிய வணிகம் மற்றும் அவசரகால பொதுச் சுகாதார நோக்கங்களுக்காக பயணத்துக்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *