Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் இன்னும் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் ..!

பிரான்சில் இன்னும் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் ..!

பொதுமுடக்கத்தின் 34வது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளசுகாதார அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 395ஆக பதிவாகியுள்ளதோடு, 36 578 பேர் இதுவரை குணமடைந்துவெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

227 பேர் மருத்துவமனைகளிலும், 168 பேர் மூதாளர் இல்லங்களிலும்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கையில், தற்போது 30 610 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 5 744 பேர்தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1 986 பேர் வைரஸ் தொற்று உள்ளமை அடையாளம்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 890 பேர் மருத்துமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். 137 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 595 பேர்குணமடைந்துள்ளனர்.

இதுவரை பிரான்சில் 175 942 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 79 988 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 12 069 பேரும்,  மூதாளர் இல்லங்களில் 7 649 பேரும் என மொத்தமாக 19 718 பேர்கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உயிர்ப்பலியாகியுள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *