Breaking News
Home / உலகம் / கொரோனா தொற்றுக்குப் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் .

கொரோனா தொற்றுக்குப் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் .

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் பதிவாகி உள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதனையடுத்து மொத்த இறப்புக்கள் 16,060 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இனம் காணப்பட்ட +5,850 பேருடன், பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 120,067 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பல நாட்களில் நிலவிய உச்ச இறப்புக்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மரணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முடக்க நிலைக் கட்டுப்பாடுகள், தற்போது பயனளிக்க தொடங்கியிருக்கலாம் எனவும், அதுவே இந்தக் குறைவிற்கு காணம் எனவும், நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மாறாக எதிர் வரும் மாதங்களில் முடக்க நிலை தளர்த்தப்படுமாயின் கொரோனா வைரஸின் பேரலைத் தாக்கத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *