Breaking News
Home / உலகம் / தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.

தமிழ் நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இது வரை 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *